HEADLINES:
November 20 2018
முதலீட்டாளர் மாநாடு பணிகளில் தாமதம் ஏன்?
04 February 2018

முதலீட்டாளர் மாநாட்டிற்கான தனி அதிகாரியை நியமிக்காததால், அதற்கான பணிகளில், சுணக்கம் ஏற்பட்டுள்ளது.

ஜெயலலிதா அறிவித்த படி, இரண்டாவது முதலீட்டாளர் மாநாடு, 2017ல் நடத்தப்படவில்லை. இந்நிலையில், முதலீட்டாளர்மாநாட்டை நடத்துவதற்கான ஆலோசனை கூட்டம், முதல்வர் பழனிசாமி தலைமையில், கடந்த வாரம் நடந்தது.ஆனால், அப்பணிகளை ஒருங்கிணைக்க, தனி அதிகாரி இன்னும் நியமிக்கப்படாததால், பணிகள் தாமதமாகியுள்ளன.

இது குறித்து, தமிழக தொழில் துறையைச் சேர்ந்த அதிகாரிகள் கூறியதாவது:

முதலீட்டாளர் மாநாட்டு பணிகள் தொடர்பாக, 10க்கும் மேற்பட்ட துறைகளை ஒருங்கிணைத்து, துடிப்பாக பணியாற்ற, ஒரு திறமையான அதிகாரி தேவை. ஜெ., இருந்தபோது, விஜய் பிங்களேவை, ஒருங்கிணைப்பு அதிகாரியாக நியமித்தார்.

ஜெ., மறைவுக்குப் பின், அவர் டில்லிக்கு சென்று விட்டார். தற்போது, மூத்த அதிகாரியான ஞானதேசிகனை, தொழில் துறை செயலராக கொண்டு வந்திருப்பது, நல்ல முடிவு. எனினும், முதலீட்டாளர் மாநாட்டு ஏற்பாடுகளை கவனிக்க, ஒருங்கிணைப்பு அதிகாரி தேவை; இல்லாவிட்டால், இந்த ஆண்டுக்குள் நடத்த முடியாது.இன்னும், ஆறு மாதங்களுக்குள், மாநாட்டை நடத்த அரசு திட்டமிட்டு உள்ளது. அதனால், உடனடியாக தனி அதிகாரியை நியமித்து, பணிகளைதுரிதப்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

 

 

Related Stories