HEADLINES:
April 02 2020
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தீ விபத்து: உயர் மட்டக்குழு விசாரணைக்கு உத்தரவு
04 February 2018

மதுரை:மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தீ விபத்து தொடர்பாக, உயர் மட்ட விசாரணைக்கு கலெக்டர் வீரராகவ ராவ் உத்தரவிட்டுள்ளார். தீ விபத்தில் சிக்கிய வீர வசந்தராயர் மண்டபம் மேற்கூரை நேற்று அதிகாலை இடிந்து விழுந்தது. விபத்துக்கு காரணமான கடைகளை அப்புறப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

உலகப்புகழ் பெற்ற மீனாட்சி அம்மன் கோயில், கிழக்கு ராஜ கோபுரம் அருகே, ஆயிரம் கால் மண்டபம் பகுதியில் 86க்கும் மேற்பட்ட கடை இயங்கி வருகின்றன. நேற்று முன்தினம் இரவு 10:00 மணிக்கு மேல் கடைகளை அடைத்து விட்டு புறப்பட்டனர். 10:15 மணியளவில் கடை எண் 76ல் தீ விபத்து ஏற்பட்டது. அப்போது பைரவ மூர்த்திக்கு, இரவு அர்ச்சனை செய்வதற்காக பட்டர் மற்றும் கோயில் ஊழியர்கள் சிலர் வந்தபோது, தீ விபத்தை கண்டு அதிர்ச்சி அடைந்து பாதுகாப்பு போலீசாரிடம் கூறினர்.

திடீர்நகர் தீயணைப்பு துறைக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். மேற்கு கோபுரம் முன் நிறுத்தப்பட்டிருந்த தீயணைப்பு வாகனம் வரவழைக்கப்பட்டது. எனினும், வாகனத்தில் போதுமான தண்ணீர் இல்லாததால் தீயை உடனே அணைக்க இயலவில்லை. இதையடுத்து இதர தீயணைப்பு வண்டிகள் மற்றும் மாநகராட்சி தண்ணீர் லாரிகளை உடனடியாக வர அழைப்பு விடுக்கப்பட்டது. அவை 45 நிமிடங்கள் தாமதம் ஆனதால், தீ மற்ற கடைகளுக்கு பரவியது. 30க்கும் மேற்பட்ட கடைகள் தீயில் எரிந்து சாம்பலாகின. மூன்றாவதாக மற்றொரு தீயணைப்பு வாகனத்தை வரவழைத்து இரவு 1:00 மணியளவில் தீ முழுமையாக கட்டுப் படுத்தப்பட்டது.

 

அஸ்திரா பரிகார ஹோமம்தீ விபத்தில் பழமையும், புராதன சிறப்பும் மிக்க வீர வசந்தராய மண்டபத்தின் மேற்கூரையின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. எனினும் ஆயிரங்கால் மண்டபம், பழைய 
திருக்கல்யாண மண்டபம் தீ விபத்தில் சேதாரமின்றி அதிர்ஷ்டவசமாக தப்பின. 
தீ விபத்தை அடுத்து கிழக்கு கோபுரம், பழைய திருக்கல்யாண மண்டபம், சுவாமி சன்னதி நந்தி சிலை வழித்தடங்கள் மூடப்பட்டன. தெற்கு கோபுரம், அம்மன் சன்னதி வழியாக நேற்று காலை 6:00 மணி முதல் பக்தர்கள் அம்மனையும், சுவாமியையும் மட்டும் தரிசிக்கும் வகையில் ஆங்காங்கே தடுப்புகள் வைத்து வழிகள் ஏற்படுத்தப்பட்டன.

சுவாமி சன்னதி நுாறு கால் மண்டபம் பகுதியில் நேற்று காலை 6:30 மணிக்கு சிவாச்சாரியார்கள் 'அஸ்திரா' பரிகார ேஹாமம் நடத்தினர். பின் கலசங்களுடன் கோயிலை வலம் வந்து, காலை 10:30 மணிக்கு அம்மனுக்கும், சுவாமிக்கும் அபிேஷகம் செய்தனர். கோயிலுக்குள் அனைத்து கடைகளும் தற்காலிகமாக மூடப்பட்டன.

 

கடைக்காரர்களுக்கு நோட்டீஸ்கோயிலுக்குள் நான்கு தலைமுறையாக தேங்காய் பழம், விபூதி குங்குமம், பேன்சி கடைகளை நடத்தி வருகின்றனர். இவர்களில் பலர் உள் வாடகைக்கு விட்டுள்ளனர். இங்குள்ள பெரும்பாலான மின் ஒயர்கள் பழுதாகி உள்ளன. அதிக வெளிச்சம் தரும் பல்புகளை எரிய விடுவதால் கடைகளில் வெப்பம் தாண்டவமாடும். நேற்றிரவு வெப்ப அழுத்தம் காரணமாக கடை எண் 76 ல் தீப்பிடித்து மற்ற கடைகளுக்கும் பரவியதாக முதற்கட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. 

தீயணைப்பு வாகனத்தில் போதுமான அளவு தண்ணீர் இல்லாததால் தீயை, துரதிர்ஷ்டவசமாக உடனடியாக கட்டுப்படுத்த இயலாமல் போனது. கடைகளை காலி செய்யக் கோரி கோயில் சார்பில், கடந்த மாதம் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதன் விசாரணை வரும் 14ல் கோயில் இணை கமிஷனர் நடராஜன் முன்னிலையில் நடக்கிறது.

 

உயர் மட்ட விசாரணைகலெக்டர் வீரராகவராவ், தக்கார் கருமுத்து கண்ணன், இணை கமிஷனர் நடராஜன் ஆகியோர் நேற்று தீ நடந்த பகுதியில் ஆய்வு செய்தனர். கலெக்டர் கூறும்போது, ''பொதுப்பணித்துறை, கோயில் தொழில்நுட்ப வல்லுனர்கள் கொண்ட உயர் மட்டக்குழு விசாரணைக்கு உத்தர 
விடப்பட்டுள்ளது. கோயில் பாதுகாப்பு முக்கியம். கடைகளை இடமாற்றுவது தொடர்பாக ஆலோசனைக்கு பின் முடிவு எடுக்கப்படும்,'' என்றார். நேற்று முன்தினம் இரவு 1:00 மணிக்குள் தீயை கட்டுப்படுத்தினாலும் நேற்று காலை மதியம் 1:00 மணி வரை வீர வசந்த ராயர் மண்டபம் பகுதியில் இருந்து கரும்புகை வெளியேறிய வண்ணம் இருந்தது. கலைநயமிக்க சிற்பங்கள், மேற்கூரைகள் தீயில் சேதமாகின. அப்பகுதியை குளிர்விக்கும் பணியில் தீயணைப்பு துறையினர் தொடர்ந்து ஈடுபட்டனர். கோயில் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற் கொள்ளப்பட்டன.

 

 

Related Stories