HEADLINES:
July 18 2018
நவம்பரில் லோக்சபா தேர்தல்?
04 February 2018

புதுடில்லி : 2019 ம் ஆண்டு நடக்க வேண்டிய லோக்சபா தேர்தல் முன்கூட்டிய நடக்கும். இந்த ஆண்டு நவம்பர் மாதத்திலேயே லோக்சபா தேர்தல் நடைபெறும் என்பதால் தொண்டர்கள் அனைவரும் தயாராக இருக்கும் படி காங்கிரஸ் கேட்டுக் கொண்டுள்ளது.

கட்சி தொண்டர்களிடையே நேற்று பேசிய ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவர் குலாம் நபி ஆசாத், இந்த ஆண்டு நவம்ர் மாதத்திலேயே லோக்சபா தேர்தல் நடக்க 90 சதவீதம் வாய்ப்பு உள்ளது. அடுத்த தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்ற கனவு நினைவாக அனைவரும் உங்களின் முழு பங்களிப்பையும் அளிக்க வேண்டும் என்றார்.

மேலும் அவர் பேசுகையில், இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சட்டீஸ்கர் ஆகிய மாநில சட்டசபை தேர்தலுடன் சேர்த்து லோக்சபா தேர்தலும் நடத்தப்படலாம் என்றார். பட்ஜெட் கூட்டத்தொடரின் துவக்க நாளில் இரு அவைகளிலும் கூட்டாக உரையாற்றிய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தும், சட்டசபை தேர்தலுடன் லோக்சபா தேர்தலையும் நடத்த வேண்டும் என கேட்டுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

 

 

Related Stories