HEADLINES:
July 17 2018
‛உலகை' வெல்ல இளம் இந்தியாவுக்கு 217 ரன் இலக்கு
03 February 2018

மவுன்ட் மவுன்கானுய்: ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில், இந்தியாவுக்கு எதிரான பைனலில் ஆஸ்திரேலிய அணி 216 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதன் மூலம் இந்திய அணிக்கு 217 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

 

பேட்டிங்

நியூசிலாந்தில் 19 வயதுக்குட்பட்டோருக்கான ஐசிசி ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. மவுனுகானுயில் உள்ள பே ஓவல் மைதானத்தில் இன்று நடந்த பைனலில் இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி 47.2 ஓவரில் 216 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அதிகபட்சமாக ஜோனாத்தன் மெர்லோ 76 ரன்கள் எடுத்தார். 

இந்திய அணி சார்பில் இஷான் போரல், சிவா சிங், கம்லேஷ் நக்ரோட்டி, அங்குல் ராய் ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்

 

 

Related Stories


First        1  2  3  4  5  6  7  8  9  10  11       Next        Last