HEADLINES:
July 18 2018
பாகிஸ்தான் போங்கள்: ஷியா போர்டு தலைவர்
03 February 2018

பைசாபாத்: அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதை எதிர்க்கும் முஸ்லிம்கள் பாகிஸ்தானுக்கும், வங்கதேசத்திற்கும் செல்லலாம் என உ.பி., மாநில ஷியா வக்ப் போர்டு தலைவர் வசீம் ரிஜ்வி பேசியுள்ளதற்கு பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

 

இந்தியாவில் இடமில்லை

அயோத்தியில் தொழுகை நடத்திய வசீம் ரிஜ்வி, பின்னர் ராம் ஜென்மபூமியின் தலைமை குரு ஆச்சார்யா சத்யேந்திர தாசை சந்தித்தார்.தொடர்ந்து அவர் கூறுகையில், அயோத்தியில், ராமர் கோயில் கட்டுவதை எதிர்ப்பவர்களும், பாபர் மசூதி கட்ட நினைக்கும் எண்ணத்தில் இருப்பவர்களும் பாகிஸ்தான் மற்றம் வங்கதேசத்திற்கு செல்ல வேண்டும். அந்த எண்ணம் கொண்ட முஸ்லிம்களுக்கு இந்தியாவில் இடமில்லை. மசூதி பெயரில், ஜிகாத்தை பரப்ப நினைப்பவர்களும், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பில் இணையலாம். அடிப்படைவாத எண்ணம் கொண்ட முஸ்லிம் மத குருமார்கள் நாட்டை சீரழிக்க நினைக்கின்றனர். அவர்கள் ஆப்கனுக்கும், பாகிஸ்தானுக்கும் செல்லலாம். இவ்வாறு அவர் கூறினார்.

 

spaceplay / pause

 

qunload | stop

 

ffullscreen

shift + slower / faster

volume

 

mmute

seek

 

 . seek to previous

12… 6 seek to 10%, 20% … 60%

பாகிஸ்தான் போங்கள்

 

 

கண்டனம்

ரிஜ்வியின் கருத்துக்கு பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.ஷியா உலாமா கவுன்சில் தவைர் மவுலானா இப்திகார் ஹூசைன் கூறுகையில், வக்ப் சொத்துகளை சட்டவிரோதமாக விற்றும், ஊழல் செய்தும் ரிஜ்வி கிரிமினல் செயலில் ஈடுபட்டுள்ளார். அவர் மீது சிபிசிஐடி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. தன்னை காத்து கொள்ளவே அவர் பெரிய நாடகம் ஆடுகிறார். இவ்வாறு அவர் கூறினார்.

 

 

Related Stories