HEADLINES:
November 20 2018
கிராமப்புறங்களை நோக்கி கவனம்: ஜெட்லி
02 February 2018

புதுடில்லி: மத்திய பட்ஜெட்டில் கிராமப்புறங்களை நோக்கி கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறினார்.

பட்ஜெட் தாக்கலுக்கு பின் தனியார் நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளுடன் நடந்த ஆலோசனையில் ஜெட்லிபேசியதாவது: பணவீக்கம் மற்றும் குறைந்தபட்ச ஆதார விலைக்கு இடையிலான இடைவெளியை சரி செய்ய வேண்டும். அறுவடை காலம் துவங்கியதும், புதிய குறைந்த பட்ச ஆதார விலை அமல்படுத்தப்படும் . இது தொடர்பாக நிதி ஆயோக், விவசாய துறையுடன் இணைந்து செயல்படும். விவசாய துறையில் அழுத்தம் இருப்பது உண்மை. இதனால், அதற்கு குறைந்த பட்ச ஆதார விலை தேவைப்படுகிறது. விவசாயிகள் வருமானத்தை அதிகரிப்பது முக்கியத்துவம் அளிக்கப்படும். கடந்த சில மாதங்களாக உற்பத்திதுறை முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. வரி சிக்கல்கள் தற்போது உச்சத்தில் இல்லை. பல துறைகளுக்கு இன்னும் அரசின் உதவி தேவைப்படுகிறது. இதனால், அதற்கு நிதி அளிக்க வேண்டியுள்ளது. 

கிராமப்புற இந்தியாவை கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. அங்கு சாலைகள், வீடு திட்டத்திற்கான செலவு மும்மடங்காகியுள்ளது. சுகாதார திட்டம் குறித்து, நிடி ஆயோக் ஆலோசனை நடத்தியது. இந்த திட்டம், உலகளவிலான சுகாதார திட்டம். சுகாதார திட்டங்கள் அமல்படுத்தப்படும் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

 

 

Related Stories