HEADLINES:
September 20 2018
ஐபோனுக்கு பதில் வந்த சோப்
02 February 2018

மும்பை: ஆன்லைன் மூலம் ஐபோன் 8 மொபைல் போனுக்கு ஆர்டர் செய்த நபருக்கு துணி துவைக்கும் சோப் விநியோகம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மஹாராஷ்டிரா மாநிலம், நவி மும்பையை சேர்ந்த தேப்ராஜ் மெகபூப் நக்ரலி என்பவர் ஆன்லைன் மூலம் ஐபோன் 8 மொபைல் போன் வாங்க பதிவு செய்துள்ளார். அப்போது மொபைல் போன் விலையான 55 ஆயிரம் ரூபாயையும் செலுத்தியுள்ளார். தொடர்ந்து கடந்த ஜன.,22ம் தேதி மொபைல் போன் பெட்டி மூலம் பார்சல் வந்துள்ளது. நர்காலி, ஆவலுடன் பார்சலை திறந்த பார்த்த போது, ஐபோன் 8 க்கு பதில் துணி துவைக்கும் சோப் இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். இது தொடர்பாக அவர் போலீசில் புகார் அளித்துள்ளார். விசாரணை நடத்தி வருவதாக போலீசார் கூறியுள்ளனர்.
இது தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாக சம்பந்தப்பட்ட ஆன்லைன் நிறுவனம் கூறியுள்ளது.

 

 

Related Stories