HEADLINES:
May 21 2018
தமிழகத்தில் ராணுவ தளவாட தொழிற்பாதை
02 February 2018

சென்னை: மத்திய பட்ஜெட் அறிவிப்பின் மூலம், நாட்டின் முதல் ராணுவ தளவாட தொழிற்பாதை, தமிழகத்தில் அமைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

 

சென்னை - கோவை - ஒசூர் - பெங்களூரு

பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் சமீபத்தில் சென்னையில் ஒரு ஆலோசனை கூட்டத்தை நடத்தினார். இதில் ராணுவ தளவாட தொழிற்பாதை அமைப்பது குறித்து பேசப்பட்டது. இந்த கூட்டத்தில், சென்னை, மைசூரு, கோவை, சேலம், திருச்சி மற்றும் பிற மாநிலங்களை சேர்ந்த ராணுவ தளவாட தொழிற்சாலை அதிகாரிகள், சிறு, குறு, நடுத்தர தொழிற்சாலை உரிமையாளர்கள் பங்கேற்றனர். சென்னை அருகே காட்டுப்பள்ளி துறைமுகம் உள்ளது. இங்கு இருந்து சென்னை, கோவை, ஓசூர், பெங்களூரு வரை ராணுவ தளவாட தொழிற்பாதை அமைக்கலாம். இங்கு, ஏராளமான தொழிற்சாலைகள் அமையும் போது பல ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

 

 

பட்ஜெட்டில் அறிவிப்பு

இந்த சூழ்நிலையில், லோக்சபாவில் நேற்று( பிப்., 1ம் தேதி) மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, ' நாட்டில் இரண்டு ராணுவ தளவாட தொழிற்பாதை அமைப்பதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளும். உள்நாட்டில் ராணுவ தளவாடங்கள் உற்பத்திக்கு இது மிகவும் உறுதுணையாக இருக்கும். இத்துடன் ராணுவ தளவாட தொழிற்சாலைகளுடன் நட்புறவு பேணும் வகையில், ராணுவ தளவாட உற்பத்தி கொள்கை - 2018 விரைவில் அறிவிக்கப்படும். இது, உள்நாட்டில் பொதுத்துறை, தனியார் துறை மற்றும் சிறு, குறு, நடுத்தர தொழிற்சாலைகள் மூலம் ராணுவ தளவாடங்கள் உற்பத்தி செய்ய உறுதுணையாக இருக்கும்' என்றார்.




இதற்கு பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் நன்றி தெரிவித்துள்ளதாக பாதுகாப்பு துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள பத்திரிகை குறிப்பில் கூறப்பட்டுள்ளது. பட்ஜெட் அறிவிப்பின் மூலம் நாட்டின் முதல் ராணுவ தளவாட தொழிற்பாதை தமிழகத்தில் அமைய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Related Stories