HEADLINES:
September 19 2018
லோயா மரண வழக்கு: இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை
02 February 2018

புதுடில்லி,: சொராபுதீன், போலி, 'என்கவுன்டர்' வழக்கை விசாரித்த, சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்ற நீதிபதி, பி.எச்.லோயா மரணம் தொடர்பான வழக்கு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது.

குஜராத்தில், சொராபுதீன் ஷேக் என்பவரை, ஆயுதம் கடத்தியதாக, 2005ல் போலீசார் கைது செய்தனர். போலீஸ் காவலில் சொராபுதீன் ஷேக் உயிரிழந்தார்.போலீசார், 'என்கவுன்டர்' செய்துவிட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டது; வழக்கு, சி.பி.ஐ.,க்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கை, சி.பி.ஐ., சிறப்பு நீதிபதி, பி.எச்.லோயா விசாரித்து வந்தார். இவர், 2014ல்,மஹாராஷ்டிர மாநிலம், நாக்பூரில், ஒரு திருமணத்துக்கு சென்றபோது, மாரடைப்பால் உயிர் இழந்தார்.இந்த மரணத்தில் மர்மம் இருப்பதாக புகார் எழுந்தது. 

இதையடுத்து, லோயா மரணம் தொடர்பாக, சுதந்திரமான விசாரணை நடத்தக்கோரி, பொதுநல வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது.கடந்த ஆண்டு ஜனவரியில் நடந்த விசாரணையின் போது 'லோயா மரணம் குறித்து, பொதுநல வழக்கு தொடர்ந்த மனுதாரர்களிடம், அனைத்து ஆவணங்களையும், ஒரு வாரத்துக்குள் தர வேண்டும்' என, மஹாராஷ்டிர அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.இந்நிலையில் இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா , கன்வீல்கர், சந்திரசூட் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன் விசாரணைக்கு வருகிறது.

 

 

Related Stories