HEADLINES:
August 18 2018
பல கோடி செலவில் இந்தி அலுவல் மொழி: சுஷ்மாவிடம் தரூர் கேள்வி
04 January 2018

புதுடில்லி: ஐ.நா.,வில் இந்தி மொழியை அலுவல் மொழியாக்குவது குறித்து லோக்சபாவில் நேற்று மோதல் ஏற்பட்டது. ஆண்டுக்கு 40 கோடி ரூபாய் செலவில், இந்தியை ஐநா அலுவல் மொழியாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக வெளியுறவு அமைச்சர் சுஷ்மா பேசியது சலசலப்பை ஏற்படுத்தியது.

 

தயக்கம்

இந்தி மொழி தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு வெளியுறவு அமைச்சர் சுஷ்மா அளித்த பதில்: ஐ.நா.,வில் இந்தி மொழியை அலுவல் மொழியாக ஏன் அறிவிக்கவில்லை என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இதற்கு , அங்கு பின்பற்றப்படும் வழக்கமான நடைமுறைகள் தான் பெரிய பிரச்னையாக உள்ளது. இந்தியை அலுவல் மொழியாக்க அங்கு உறுப்பினர்களாக உள்ள 193 நாடுகளில், 129 நாடுகள் ஆதரவாக ஓட்டளிக்க வேண்டும். மேலும், செலவு தொகையையும் அந்த நாடுகள் ஏற்க வேண்டும். இதனால், இந்தியை ஆதரிக்க முடிவு செய்தாலும் பொருளாதாரத்தி்ல பின் தங்கியுள்ள சில நாடுகள், தயக்கம் தெரிவிக்கின்றன. 

 

spaceplay / pause

 

qunload | stop

 

ffullscreen

shift + slower / faster

volume

 

mmute

seek

 

 . seek to previous

12… 6 seek to 10%, 20% … 60%

Powered by Vasanth & Co

 

 

தயார்

இது குறித்து இந்தியா நவடிக்கை எடுத்து வருகிறது. பிஜி, மொரிஷியஸ், சூரினாம் நாடுகளின் ஆதரவை பெற மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது. அங்கு இந்திய வம்சாவளி மக்கள் வசிக்கின்றனர். அந்த நாடுகளின் ஆதரவை பெற்ற பின்னர், செலவையும் ஏற்க மத்திய அரசு தயாராக உள்ளது. இந்தி அலுவல் மொழியாக வருடத்திற்கு ரூ.40 கோடி செலவாகும். ஆனால், மத்திய அரசு ரூ.400 கோடி கூட செலவு செய்ய தயாராக உள்ளது. வெளிநாட்டு தலைவர்கள் இந்தியா வரும் போது, ஆங்கிலத்தில் பேசினால், நாங்களும் ஆங்கிலத்தில் பேசுகிறோம். அவர்கள், தங்கள்நாட்டு மொழியில் பேசினால், நாங்கள் இந்தியில் பேசுகிறோம். தற்போது போல், முன்னர் வெளியுறவு அமைச்சகங்கள் இந்தி மொழிக்காக அதிக பணிகள் செய்ததில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

 

சந்தேகம்

இதற்கு பின்னர் காங்கிரஸ் கட்சியின் சசிதரூர் பேசும்போது, இந்தி, தேசிய மொழி அல்ல. அது அலுவல் மொழி மட்டுமே. இந்தியை மட்டும் முன்னிலைபடுத்துவது பல சந்தேகங்களை எழுப்புகிறது. இந்தியை ஏன் ஐ.நா.,வில் அலுவல் மொழியாக்க வேண்டும். இந்தியை விட அரபி மொழியை குறைந்த எண்ணிக்கையில் மக்கள் பேசுகின்றனர். ஆனால், அது 22 நாடுகளில் பேசப்படுகிறது. நாளை தமிழகம் அல்லது மேற்கு வங்கம் அல்லது வேறு மாநிலத்தை சேர்ந்த ஒருவர் பிரதமர் அல்லது வெளியுறவு அமைச்சரானால், அவர்களை ஏன் ஐ.நாவில் இந்தியில் பேச கட்டாயபடுத்த வேண்டும். என கேள்வி எழுப்பினார்.

 

அறியாமை

இதற்கு சுஷ்மா அளித்த பதில், இந்தி மொழியை, இந்திய சமூக மக்கள் பேசுகின்றனர். பிஜியில் இந்தி அலுவல் மொழியாக உள்ளது. மொரிஷியஸ், சூரினாம், டிரினாட் டுபாகோ மற்றும் சில நாடுகளில் இந்தி மொழி பேசப்படுகிறது. இந்தியாவில் மட்டும் தான் இந்தி மொழி பேசப்படுகிறது என்பது சசி தரூரின் அறியாமையை காட்டுகிறது. இவ்வாறு அவர் பேசினார். இதன் பின்னர் சுஷ்மா தனது டுவிட்டர் பக்கத்தில், இந்திய மொழிகள் குறித்து எனக்கு பெருமையாக உள்ளது. அதில் சிலவற்றை என்னால் சரளமாக பேச முடியும் எனக்கூறி, கன்னட மொழியில் பேசிய வீடியோவை வெளியிட்டுள்ளார்.

 


40 கோடி செலவு:

2

 

எப்போதாவது ஐ.நாவில் ஏதாவது ஒரு இந்திய தலைவர் பேசுவதற்காக, ஆண்டுக்கு 40 கோடி ரூபாயை இந்தியா செலவு செய்வது எதிர்க்கட்சிகள் மத்தியில் கேள்விகளை எழுப்பி உள்ளது. ‛‛இதற்குப் பதில் இந்த பணத்தை வேறு ஏதாவது வளர்ச்சிப் பணிகளை செய்யலாம்'' என சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

 

 

Related Stories