HEADLINES:
August 18 2018
முத்தலாக் மசோதா: ராஜ்யசபாவில் நாளை தாக்கல்
02 January 2018

புதுடில்லி: எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே, 'முத்தலாக்'கை தடை செய்யும் சட்ட மசோதா, லோக்சபாவில் நிறைவேறியதையடுத்து , ராஜ்யசபாவில் நாளை(டிச.,3) தாக்கல் செய்யப்பட்டு விவாதிக்கப்பட உள்ளது. 

முஸ்லிம் ஆண்கள், மூன்று முறை, 'தலாக்' கூறி, மனைவியை விவாகரத்து செய்யும் முத்தலாக் நடைமுறைக்கு எதிராக, உச்ச நீதிமன்றம், கடந்த ஆண்டு ஆக., 22-ல் தீர்ப்பு வழங்கியது. அதில் முத்தலாக் நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், சட்டம் இயற்றவும் மத்திய அரசுக்கு, உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்தது. இதையடுத்து, முத்தலாக்கை தடை செய்யும் சட்டத்தை கொண்டுவர மத்திய அரசு தீவிரம் காட்டியது. 'முஸ்லிம் பெண்கள் திருமண பாதுகாப்பு சட்டம்' என்ற பெயரில், புதிய மசோதா உருவாக்கப்பட்டது.

 

குரல் ஓட்டெடுப்பு


பார்லி.யில் கடந்த டிசம்பர் 27-ம் தேதி நடந்த விவாதத்துக்கு பின், முத்தலாக் மசோதா, குரல் ஓட்டெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் இந்த மசோதா,நாளை(டிச.,3) ராஜ்யசபாவில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது. இதிலும் வெற்றிகரமாக நிறைவேறினால், ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும். ஒப்புதல் கிடைத்தும், சட்டம் அமலுக்கு வரும்.

 

மசோதா முக்கியம்சங்கள்

மூன்று முறை தொடர்ந்து தலாக் கூறி, மனைவியை விவாகரத்து செய்யும் ஆண்களுக்கு, மூன்று ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும்.வாய்மொழி, கடிதம், இ - மெயில், எஸ்.எம்.எஸ்., உட்பட எந்த வகையிலும், முத்தலாக் நடைமுறையில் விவாகரத்து அளிக்க முடியாது.இதை மீறி, முத்தலாக் கூறும் ஆண்கள் கைது செய்யப்பட்டால், ஜாமின் வழங்கப்பட மாட்டாது. விவாகரத்து பெறும் பெண்களுக்கு, முறையான ஜீவனாம்சம் அளிக்கவும், அவர்களின் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்புக்கு பொறுப்பேற்கவும் இந்த மசோசதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

 

 

Related Stories