HEADLINES:
January 16 2018
நாடு முழுவதும் பூரண மதுவிலக்கு : நிதிஷ் அழைப்பு
11 December 2017

புதுடில்லி : நாடு முழுவதும் பூரண மதுவிலக்கை கொண்டு வர வேண்டும் எனவும், மது அருந்துவதால் ஏற்படும் பாதிப்புக்கள் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும் என பீகார் முதல்வர் நிதிஷ்குமார் கேட்டுக் கொண்டுள்ளார்.

இது குறித்து அவர் பேசுகையில், நாடு முதுவதும் மது விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும் என்றோ, மது விற்பனைக்கு எதிராக போராட்டங்களுக்கு ஏன் காங்., மற்றும் இடதுசாரி கட்சிகள் ஆதரவு அளிப்பதில்லை. குஜராத்திலும், பீகாரும் மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ள போது, ஏன் நாடு முழுவதும் கொண்டு வர முடியாது?

அனைத்து மதங்களும் மது அருந்துவதை எதிர்க்கின்றன. பூரண மதுவிலக்கு கொண்டு வந்தால் அதனை அனைத்து மதங்களும் வரவேற்கும். அது மிகப் பெரிய விஷயமாக அமையும். மதுவிற்கு தடை விதித்தால் குற்ற எண்ணிக்கைகள், சாலை விபத்துக்கள், பல்வேறு நோய்கள் குறையும் என்றார்.

 

 

Related Stories