HEADLINES:
January 16 2018
பாரம்பரிய இசை நகரம்: சென்னைக்கு யுனெஸ்கோ அங்கீகாரம்
08 November 2017

புதுடில்லி : இந்தியாவின் பாரம்பரிய இசை நகரங்கள் பட்டியலில் சென்னையையும் இணைத்து யுனெஸ்கோ கவுரவித்துள்ளது. இதற்கு முன் இந்தியாவின் பாரம்பரிய இசை நகரங்கள் பட்டியலில் ஜெய்பூர் மற்றும் வாரணாசி ஆகியவை மட்டுமே இடம்பெற்றிருந்தன.


யுனெஸ்கோ கவுரவம் :

பாரம்பரிய இசை மற்றும் நாட்டுப்புற கலைகளின் வளர்ச்சிக்காக பங்காற்றி வரும் நகரங்களுக்கு யுனெஸ்கோ இந்த கவுரவத்தை அளித்து வருவது குறிப்பிடத்தக்கது. பாரம்பரிய இசை நகரங்கள் பட்டியலில் சென்னையையும் சேர்க்கக் கோரி மத்திய கலாச்சார அமைச்சகம் சார்பில் கடந்த சில மாதங்களுக்கு முன் யுனெஸ்கோவின் கிரியேடிவ் சிட்டிஸ் நெட்வொர்க் இடம் பரிந்துரை செய்தது. 
இதனை ஏற்றுக் கொண்ட சிசிஎன், சென்னையை பாரம்பரிய இசை நகரங்கள் பட்டியலில் இணைத்துள்ளது. இதுவரை இந்த பட்டியலில் 54 நாடுகளைச் சேர்ந்த 116 நகரங்கள் இடம்பெற்றுள்ளன.

 


மோடி வாழ்த்து :


யுனெஸ்கோ பாரம்பரிய இசை நகரங்கள் பட்டியலில் இணைந்ததற்காக சென்னை மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். மதிப்புமிக்க நமது கலாச்சாரத்தின் வளர்ச்சிக்கு சென்னை அளித்து வரும் பங்கு குறிப்பிடத்தக்கது. இது இந்தியாவிற்கு பெருமை தரும் நிகழ்வாகும் என மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

 

 

Related Stories