HEADLINES:
January 21 2018
சதி வலையில் இளைஞர்கள் சிக்கிவிட கூடாது: ராஜ்நாத்சிங்
12 September 2017

புதுடில்லி: ‛பயங்கரவாதிகளின் சதி வலையில் இளைஞர்கள் சிக்கிவிட கூடாது' என உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்தார்.

 

சிக்கிவிட கூடாது:


ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ரஜோரி மாவட்டத்திலுள்ள நவ்ஷெரா எல்லைப் பகுதிக்கு சென்ற மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் முகாமில் உள்ள பெண்கள், குழந்தைகள் மத்தியில் பேசியதாவது: ஜம்மு - காஷ்மீர் இளைஞர்கள், பிரிவினைவாதிகளின் சதி வலையில் சிக்கிவிடக் கூடாது. பயங்கரவாதிகளின் மோசமான நடவடிக்கைகளால், பலரது வாழ்க்கை கேள்விக்குறியாகி உள்ளது. இளைஞர்கள், தங்கள் பொறுப்பு உணர்ந்து செயல்பட வேண்டும்.

 

மதிப்பு உயர்வு:

 

எல்லையில் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்துவதை பாக்., உடனடியாக நிறுத்த வேண்டும். எல்லையில் வாழ்பவர்கள் இந்தியாவின் சொத்து. அவர்களின் தேவையை இந்தியத பூர்த்தி செய்யும். பிரதமர் மோடியின் தலைமையிலான அரசால், இந்தியாவின் மதிப்பு உலகளவில் பன்மடங்கு உயர்ந்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 

 

Related Stories