HEADLINES:
November 18 2017
வழக்கறிஞர் தொழிலில் கட்டப்பஞ்சாயத்து அதிகம் : நீதிபதி வேதனை
08 November 2017

சென்னை : சென்னை ஐகோர்ட் வழக்கறிஞர் சங்க தலைவர் மோகன் கிருஷ்ணன் வழக்கு ஒன்றில் இன்று ஆஜரானார். அவரிடம் ஐகோர்ட் நீதிபதி கிருபாகரன் சில கருத்துக்களை தெரிவித்தார்.
நீதிபதி கிருபாகரன் கூறுகையில், கல்லூரிக்கே செல்லாமல் சிலர் வழக்கறிஞர் ஆவதால், கட்டப் பஞ்சாயத்து அதிகமாகி விட்டது. கட்டப்பஞ்சாயத்தை தடுத்து நிறுத்தாவிட்டால், வழக்கறிஞர் தொழிலை யாராலும் காப்பாற்ற முடியாது. நாமே காப்பாற்ற முடியாவிட்டால் ஆண்டவன் தான் காப்பாற்ற வேண்டும். பல்வேறு பிரச்னைகளுக்காக போராட்டத்தில் ஈடுபடும் சங்கம் இப்பிரச்னையையும் முன்னெடுக்க வேண்டும்.
25 ஆண்டுகளுக்கு முன்பிருந்து வழக்கறிஞர் தொழில் மீதான புனிதத்தை நாம் தான் மீட்டெடுக்க வேண்டும். கல்லூரிக்கு செல்லாமலே தொலைதூரக் கல்வி மூலம் வேறு மாநிலங்களில் சட்டம் படிப்பவர்களால் தான் இந்த வழக்கறிஞர் தொழில் மீதான புனிதம் கெடுகிறது. தனியார், அரசு துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களை வழக்கறிஞர்களாக பதிவு செய்ய வேண்டாம். சென்னை ஐகோர்ட் வழக்கறிஞர் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களை வழக்கறிஞர்களாக பதிவு செய்ய தடை விதிக்க வேண்டும். போலீசாருக்கு எதிராக மட்டும் போராடுவதை விட்டு வழக்கறிஞர்கள் தொழிலையும் சரிசெய்ய நடவடிக்கை எடுங்கள் என தெரிவித்துள்ளார்.

 

 

Related Stories