HEADLINES:
November 18 2017
தேர்வை ரத்து செய்ய சிறுவனை கொன்ற 11ம் வகுப்பு மாணவர்
08 November 2017

புதுடில்லி: குர்கானில் உள்ள ரயான் சர்வதேச பள்ளியில் படித்த 7 வயது மாணவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக அதே பள்ளியில் படித்த 11ம் வகுப்பு படித்த மாணவன் கைது செய்யப்பட்டான். தேர்வை ரத்து செய்ய கொலை செய்தது விசாரணையி்ல தெரிய வந்துள்ளதாக சிபிஐ அதிகாரிகள் கூறியுள்ளனர்.

 

பரபரப்பு


கடந்த செப்., 8ம் தேதி அரியானா மாநிலம் குர்கானில் உள்ள ரயான் சர்வதேச பள்ளி கழிப்பறையில் பிரதியுமான் தாக்கூர் (7) என்ற சிறுவன் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கபட்டான். சம்பவம் தொடர்பாக பஸ் கண்டக்டர் அசோக் குமார் என்பவரை போலீசார் கைது செய்தனர். பாலியல் தொந்தரவு காரணமாக கொலை நடந்ததாக போலீசார் கூறியிருந்தனர். இதனை ஏற்காக பிரதியுமான் பெற்றோர் மற்றும் அங்கு படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனையடுத்து வழக்கு சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றப்பட்டது. இந்த சம்பவம் நாடு முழுதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

 

சிறந்த மாணவன் இல்லை


கடந்த செப்.,22 முதல் வழக்கை எடுத்து விசாரணை நடத்திய அதிகாரிகள், கொலை சம்பவம் தொடர்பாக, ரேயான் பள்ளியில் 11ம் வகுப்பு படிக்கும் மாணவனை கைது செய்தனர்
இது தொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், பிரதியுமான் உடலை முதலில் பார்த்தது, கைது செய்யப்பட்ட 11ம் வகுப்பு மாணவன் தான். பள்ளி தேர்வை ஒத்திவைக்க இந்த கொலையை செய்துள்ளான். அவனிடம் பல முறை விசாரணை நடத்தப்பட்டது. 
கொலைக்கு முன்னர், இன்று தேர்வு நிச்சயம் ஒத்திவைக்கப்படும். யாரும் கவலைப்பட வேண்டாம் என தனது நண்பர்களிடம் கூறியிருந்தான். அவனது பள்ளி சான்றுகளிலும், சிறந்த மாணவன் அல்ல எனக்குறிப்பிடப்பட்டுள்ளது. பிரதியுமானுடன் கழிப்பறைக்கு சென்ற 5 நபர்களில் அவனும் ஒருவன். இது பள்ளியில் இருந்த ரகசிய கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

 

மறுப்பு


கைது செய்யப்பட்ட மாணவனின் தந்தை கூறுகையில், நேற்று இரவு எனது மகனை கொலை வழக்கு தொடர்பாக போலீசார் கைது செய்தனர். அவன், கொலை செய்யவில்லை. நாங்கள் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கியுள்ளோம். நான்கு முறை எங்களிடம் விசாரணை நடந்துள்ளது. எங்களது வீட்டிற்கு வந்தே விசாரணை நடக்கும். ஆனால், நேற்று சிபிஐ அலுவலகத்தில் நள்ளிரவு வரை என்னை அமர வைத்திருந்த அதிகாரிகள், உங்களது மகன்தான் கொலை செய்தார். அவரை கைது செய்தோம் என தெரிவித்தனர். இவ்வாறு அவர் கூறினார். 

 

 

Related Stories