HEADLINES:
November 18 2017
தினமும் கணவரை மாற்றும் சினிமா குடும்பத்தினர்: பா.ஜ., எம்.பி., சர்ச்சை கருத்து
08 November 2017

புதுடில்லி : இந்தி சினிமா டைரக்டர் சஞ்சய் லீலா பன்சாலி, இயக்கி உள்ள பிரம்மாண்ட படம் பத்மாவதி. இப்படம் டிசம்பர் 1 ம் தேதி இந்தியாவில் ரிலீசாக உள்ளது.
இந்நிலையில், இப்படம் குறித்து பா.ஜ., எம்.பி., சிந்தாமணி மல்வியா தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பேஸ்புக்கில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், 
ராணி பத்மினியை அவமதிக்கும் வகையில் பத்மாவதி படம் இயக்கப்பட்டுள்ளது. அண்டை நாட்டு இஸ்லாமிய மன்னரான அலாவுதீன் கில்ஜி தன்னை கவர்ந்து செல்ல வந்த போது, தன்னை காப்பாற்றிக் கொள்வதற்காக, ராணி பத்மினி தன்னை தீயிட்டு எரித்துக் கொண்டதாக சில கதைகள் கூறுகின்றன. 
ஆனால் பன்சாலி தனது படத்தில், அலாவுதீன் கில்ஜியுடன் ராணி பத்மினிக்கு காதல் ஏற்படுவதாக காட்டி உள்ளார். இது நமது வரலாற்றை சிதைப்பதாகவும், பத்மினியை அவமதிப்பதாகவும் உள்ளது. 
ராணி பத்மினியை இவ்வாறு அவமதிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. நமது பெருமை மிகு வரலாறு சிதைக்கப்படுவதை பொறுத்துக் கொள்ள முடியாது. இது தவறு அல்ல. கண்டனத்திற்குரிய செயல்.
ஒவ்வொரு இந்திய பெண்ணின் அடையாளம் பத்மினி. அவர் இந்தியர்களின் பெருமை. நமது நாடு மற்றும் சமூகத்தின் கண்ணியத்தை காக்க வேண்டும். பத்மினியுடன் ஆயிரக்கணக்கான பெண்களும் தங்களின் மானத்தை காத்துக் கொள்வதற்காக எரியும் தீயில் இறங்கினர். 
இந்த தியாகம், சினிமா எடுப்பவர்களின் குடும்பத்தில் இருக்கும் பெண்களுக்கு தெரியாது. அவர்களால் புரிந்து கொள்ள முடியாது. ஏனெனில் அவர்கள் தினமும் கணவர்களை மாற்றுபவர்கள். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். மல்வியாவின் இந்த கருத்து, கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

 

 

Related Stories