HEADLINES:
November 18 2017
மீண்டும் வாலாட்டுது ‛பீட்டா'; தமிழக அரசுக்கு நோட்டீஸ்
07 November 2017

புதுடில்லி: ஜல்லிக்கட்டை நடத்தும் வகையில், தமிழக அரசு கொண்டு வந்த சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசுக்கு, 'நோட்டீஸ்' அனுப்ப, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. 

 

புதிய வழக்கு:


ஜல்லிக்கட்டை நடத்த அனுமதிக்கும், தமிழக அரசின் சட்டத்தை எதிர்த்து, பிராணிகள் நல அமைப்பான, 'பீட்டா' உச்ச நீதிமன்றத்தில் புதிய வழக்கு தொடர்ந்துள்ளது.

அதன் விபரம்: தமிழக அரசின் சட்டத்தைத் தொடர்ந்து, பிப்ரவரியில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், ஜல்லிக்கட்டு நடந்தது. இதில், காளைகள் துன்புறுத்தப்பட்டு உள்ளன. அதற்கான, 'வீடியோ' மற்றும் புகைப்பட ஆதாரம் இணைக்கப்பட்டு உள்ளது. ஜல்லிக்கட்டை நடத்த அனுமதிக்கும் சட்டம் செல்லாது என, அறிவிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

இந்த வழக்கு தொடர்பாக, நான்கு வாரங்களுக்குள் பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப, தலைமை நீதிபதி, தீபக் மிஸ்ரா தலைமையிலான, உச்ச நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டு உள்ளது.

 

 

Related Stories