HEADLINES:
November 18 2017
ஜி.எஸ்.டி., பெரிய சுயநல வரி: மம்தா தாக்கு
07 November 2017

கோல்கட்டா: ஜி.எஸ்.டி., என்பது பெரிய சுயநல வரி என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

 

கருப்பு தினம்:


இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்ததாவது: ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கை இந்த நாட்டின் மிகப்பெரிய துயர சம்பவம். அறிவிப்பு வெளியிடப்பட்ட நவ.,8 ம் தேதி கருப்பு தினமாக அனுசரிப்போம். டுவிட்டரில் புரெபைல் படமாக கருப்பு நிறத்தை பதிவிட்டு நமது எதிர்ப்பை தெரிவிப்போம். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

 

சுயநல வரி:

 

தனது மற்றொரு பதிவில், ஜி.எஸ்.டி., என்பது, 'கிரேட் செல்பிஷ் டாக்ஸ்' எனப்படும், பெரிய சுயநல வரி; இது, மக்களை துன்புறுத்துவதற்காகவே விதிக்கப்படுகிறது. இதனால், வேலைவாய்ப்புகள் பறிபோகின்றன; தொழில் பாதிக்கிறது; பொருளாதாரம் சீர்குலைந்துள்ளது. இவ்வாறு அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

 

 

Related Stories


First        1  2  3  4  5  6  7  8  9  10  11       Next        Last