HEADLINES:
October 17 2017
திமுகவுடன் சேர்ந்து ஆட்சிக்கு தினகரன் மிரட்டல்: வசந்தி முருகேசன் எம்.பி.,
22 September 2017

சென்னை: திமுகவுடன் இணைந்து ஆட்சிக்கு தினகரன் மிரட்டல் விடுத்து வருவதாக முதல்வரை சந்தித்த பின் தென்காசி தொகுதி எம்.பி., வசந்தி முருகேசன் கூறினார். 

 

ஆதரவு:

அதிமுகவிலிருந்து ஓரங்கட்டப்பட்ட தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். அவருக்கு ஆதரவாக சில எம்.பி.,க்கள் செயல்பட்டு வந்தனர். அவர்களில் தென்காசி எம்.பி., வசந்தி முருகேசனும் ஒருவர். இவர், தினகரனுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வந்தார். 
இந்நிலையில், அவர் தினகரன் அணியிலிருந்து விலகி முதல்வருக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள வீட்டில் முதல்வர் பழனிசாமியை வசந்தி முருகேசன் சந்தித்து பேசினார். இதனையடுத்து தினகரன் ஆதரவு எம்.பி.,க்களின் எண்ணிக்கை 7 ஆக குறைந்துள்ளது.

 

மிரட்டல்:

ஜெயலலிதா விட்டு சென்ற திட்டங்களை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் இணைந்து தொடர்வார்கள். அவர்களுடன் நான் இணைந்து பணியாற்றுவேன். திமுகவுடன் இணைந்து ஆட்சியை கலைத்து விடுவேன் என தினகரன் கூறுவது எந்த வகையில் நியாயம். ஆட்சியை கலைத்து விடுவேன் என தினகரன் கூறியுள்ளார். இதனால் தொண்டர்கள் கொதித்து போயுள்ளனர். 
முதல்வர் அணிக்கு மேலும் சில எம்பிக்கள் வர உள்ளனர். ஜெயலலிதாவால் உருவாக்கப்பட்ட எம்எல்ஏக்களை அழைத்து சிறை பிடித்துவைத்துள்ளனர் என கருதுகிறேன். மக்களுக்கு பணியாற்றாமல் தனியாக உள்ளது என்ன நியாயம். எனக்கு மிரட்டல் ஏதுமில்லை. ஆட்சி தொடர வேண்டும் என்பதால் முதல்வருக்கு ஆதரவு தெரிவித்துள்ளேன். ஆட்சியை கலைப்போம் என கூறுவது எனக்கு பிடிக்கவில்லை. முதல்வர், துணை முதல்வர் தொடர வேண்டும் என தொகுதி மக்கள் விரும்புகின்றனர். இவ்வாறு அவர் கூறினார். 

 

 

Related Stories