HEADLINES:
October 17 2017
பள்ளிகளில் அடிப்படை வசதிக்கு குரல் கொடுக்காதது ஏன்?: அரசியல் கட்சிகளுக்கு ஐகோர்ட் கேள்வி
22 September 2017

சென்னை: ஜாக்டோ ஜியோ போராட்டத்திற்கு ஆதரவு அளித்த அரசியல் கட்சிகள், பள்ளிகளில் அடிப்படை வசதி குறித்து கேளவி எழுப்பாதது ஏன் என சென்னை ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.

 

தாமதம் ஏன்?

ஆசிரியர்கள் போராட்டம் தொடர்பான வழக்கு சென்னை ஐகோர்ட்டில், நீதிபதி கிருபாகரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி கூறியதாவது: ஆசிரியர் போராட்டத்திற்கு ஆதரவு தந்த கட்சிகள், பள்ளிகளில்அடிப்படை வசதிகள் குறித்து குரல் கொடுக்காதது ஏன்? கன்னியாகுமரியில் பள்ளிக்கு வந்த மாணவர்களை திருப்பி அனுப்பிய ஆசிரியர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? அரசியல்வாதிகளை விமர்சிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் போது நீதித்துறைக்கு தாமதம் ஏன்? 
அரசு அதிகாரிகள் பற்றிகேள்வி கேட்பதால், நீதித்துறை மீதான விமர்சனங்களை ரசிக்கிறார்களா? கருத்து சுதந்திரம் என்ற பெயரில் நீதிபதிகள், நீதித்துறையை விமர்சனம் செய்பவதை ஏற்க முடியாது. இணையதளத்தில் விமர்சித்தவர்கள் யார் என கண்டறிய வேண்டும். ஹெல்மெட், டாஸ்மாக் குறித்த உத்தரவுகள் தொடர்பாக என் மீது அதிக விமர்சனம்செய்யப்பட்டது. விமர்சனம் செய்தவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த அக்.,4க்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு நீதிபதி கிருபாகரன் கூறினார்.

 

விளக்கம்:

அப்போது அரசு தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில், நீதித்துறையை விமர்சனம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். நெல்லையை சேர்ந்த முருகன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டது.

 

 

Related Stories