HEADLINES:
October 17 2017
அதிமுக, இரட்டை இலை எங்களுக்கே; தேர்தல் ஆணையத்திடம் இபிஎஸ் கடிதம்
22 September 2017

புதுடில்லி: அதிமுக மற்றும் இரட்டை இலை சின்னத்திற்கு உரிமை கோரி ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்., தரப்பில் தேர்தல் ஆணையத்திடம் கடிதம் வழங்கியுள்ளனர்.
அ.தி.மு.க.,வில், பழனிசாமி, பன்னீர் அணிகள் இணைந்து, செப்., 12ல், பொதுக்குழுக் கூட்டத்தை கூட்டின. இக்கூட்டத்தில், பொதுச்செயலர் பதவியில் இருந்து, சசிகலா நீக்கப்பட்டார். கட்சியை வழிநடத்த, ஒருங்கிணைப்பாளராக பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளராக பழனிசாமி ஆகியோர் நியமிக்கப்பட்டனர். அதற்கு, ஒப்புதல் அளிப்பது உட்பட, பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த தீர்மானங்களை, தேர்தல் ஆணையத்தில் அமைச்சர்கள் ஜெயகுமார், சி.வி.சண்முகம், உதயகுமார், முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, முன்னாள் எம்.பி., மனோஜ் பாண்டியன் ஆகியோர் சமர்ப்பித்தனர். 

 

கடிதம்:

மேலும், கட்சி, இரட்டை இலை சின்னத்திற்கு உரிமை கோரி கடிதம் வழங்கினர். அதில், எம்எல்ஏக்கள், எம்.பி.,க்கள் இணைந்து விட்டதாகவும், இணைப்பை பொதுக்குழு அங்கீகரித்து விட்டதால், கட்சியும் சின்னமும் எங்களுக்கே சொந்தம். அதிமுகவிலிருந்து சசிகலா நீக்கப்பட்டு விட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

 

தாக்கல்:

பின்னர் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி அளித்த பேட்டி: பொது செயலர் என்ற பதவி இல்லை என்ற தீர்மானத்தின் நகல், பொதுக்குழு தீர்மானங்கள், மற்றும் பொது செயலருக்கு இணையான அதிகாரமிக்க 2 பதவிகள் உருவாக்கப்பட்டது குறித்த ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டது. அணிகள் இணைப்பு குறித்த கடிதத்தையும் வழங்கியுள்ளோம்.ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இந்த நாள் மிக துயரமான நாள். இவ்வாறு அவர் கூறினார்.

 

 

Related Stories