HEADLINES:
November 20 2017
பொய்யான பொதுக்குழு:தினகரன் அலறல்
12 September 2017

மதுரை: இன்று கூடியது பொதுக்குழு கூட்டமல்ல; வெறும் கூட்டம் என மதுரையில் தினகரன் கூறியுள்ளார்.

 

தொண்டர்கள் விருப்பம்:

இது தொடர்பாக அவர் அளித்த பேட்டி: இன்று அவர்கள் கூட்டியது பொதுக்குழு கூட்டமல்ல; வெறும் கூட்டம். எந்த தீர்மானம் நிறைவேற்றினாலும், அதற்கு, சட்ட ரீதியான அங்கீகாரம் கிடையது என கோர்ட் கூறியுள்ளது. அக்.,23ல் வழக்கு விசாரணைக்கு வரும்போது தீர்மானம் செல்லுமா செல்லாதா என கோர்ட் சொல்லும் போது தெரியவரும் இந்த அரசை வீட்டை விட்டு அனுப்புவதற்கான பணியில் இறங்கிவிட்டேன் என்பதை நேற்றே கூறினேன். இன்றும் அதனை கூறுகிறேன். ஜெயலலிதா இடத்தில் வேறு யாரையும் பார்க்க முடியாது என சொன்னவர்கள் தான் சசிகலாவை அமர் வைத்தவர்கள். ஜெயலலிதா இருந்த முதல்வர் இடத்தில், எடப்பாடியை பார்க்க விரும்பவில்லை. இதை செய்ய இறங்கி விட்டேன். ஜெயலலிதா இருந்த முதல்வர் சிம்மாசனத்தில் இவர்களை பார்க்க முடியாது என்பதுதான் மக்கள், தொண்டர்கள் விருப்பம்

 

பயம்:

தற்போது நடப்பது ஜெயலலிதா ஆட்சி இல்லை. எடப்பாடி அண்ட் கோ ஆட்சி. துரோகமும் துரோகமும் இணைந்து ஆட்சி செய்கின்றனர். இரட்டை இலையை முடக்கிய, அரசுக்கு எதிராக ஓட்டு போட்ட பன்னீர் செல்வத்துடன் எடப்பாடி கை கோர்த்துள்ளார். தேர்தலில் நிற்க சில அமைச்சர்களுக்கு பயம். 2 மாதத்திற்கு முன்பே இந்த ஆட்சிக்கும்,கட்சிக்கும் சம்பந்தமும் இல்லை என சொல்லியுள்ளேன். என்னை சந்திப்பவர்கள் பேசுபவர்கள இந்த ஆட்சி வேண்டாம். இதை நீக்கிவிட்டு ஜெயலலிதா ஆட்சி கொண்டு வாருங்கள் என என்னிடம் கூறுகினறனர்.

 

அமைச்சர்கள் எதிர்ப்பு:

அவர்களால் தேர்தலில் நிற்க முடியாது. டிபாசிட் வாங்க முடியாது. அங்கு சில எம்எல்ஏக்கள் முழுமனதாக இல்லை. ஆட்சி போனதும் எங்களுடன் வருவார்கள்நாங்கள் திமுகவுடன் கை கோர்த்துள்ளதாக அமைச்சர்கள் பொய் பிரசாரம் செய்கின்றனர். தேர்தல் களத்தில் திமுகவுக்கும் எங்களுக்கும் போட்டி இருக்கும். அதில் வெற்றி பேறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. எடப்பாடியை முதல்வராக்க 10 எம்எல்ஏக்களுக்கு விருப்பமில்லை. அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, வீரமணி, பெஞ்சமின், 5 எம்எல்ஏக்களை அழைத்து கொண்டு வெளியேற முயற்சி செய்தனர். அவர்களை தடுத்து நிறுத்தியது நாங்கள் தான். செம்மலை, எடப்பாடியை ஏற்று கொள்ள முடியாது என்பதால் தான் வெளியே சென்றார்.

 

தயக்கம்:

கவர்னர் 2 நாட்களில் முடிவு எடுப்பார். இல்லையென்றால், அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பேன். தற்போது உள்ள அரசுக்கு பெரும்பான்மை இல்லை. எங்களிடம், 21 எம்எல்ஏக்கள் உள்ளனர். பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட கவர்னர் தயங்குகிறார். இரு தரப்பும் தேர்தலில் நின்று வெற்று பெறும்போதுதான் யார் உண்மையான அதிமுக என்பது தெரிய வரும். இவ்வாறு அவர் கூறினார்.

 

 

Related Stories


First        1  2  3  4  5  6  7  8  9  10  11       Next        Last