HEADLINES:
November 20 2017
144 வருடங்களுக்கு பின் மஹா புஷ்கர விழா துவங்கியது: பக்தர்கள் புனித நீராடல்
12 September 2017

மயிலாடுதுறை: 144 வருடங்களுக்கு பின் காவிரி மஹா புஷ்கர விழா துவங்கியது. ஆயிரகணக்கான பக்தர்கள் புனித நீராடினர்.

 

புனித நீர்:

 

குரு பகவான், 12 ஆண்டுகளுக்கு பின், கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு பெயர்ச்சி அடைந்துள்ளார். அவர், ஓராண்டு காலம், துலாம் ராசியில் சஞ்சரிப்பார். இந்த ஓராண்டில், துலாம் ராசிக்குரிய புண்ணிய நதியான காவிரியில், பிரம்மாவின் கமண்டலத்தில் உள்ள புஷ்கர தீர்த்தம் காவிரியில் கலந்து, நீராடுபவர்களின் பாவங்களை தீர்க்கும் என்பது நம்பிக்கை.இதன்படி 144 வருடங்களுக்கு பின் மஹா புஷ்கர் விழா இன்று துவங்கியது. காஞ்சி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள், யாகம் செய்த புனித நீரை காவிரியாற்றில் ஊற்றி புனிதபடுத்தினார். தொடர்ந்து ஜெயேந்திரர், விஜயேந்திரர், தர்மபுரி ஆதினம் ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பிரம்மச்சாரி சுவாமிகள், தர்மபுரி இளைய ஆதினம், திருவாடுதுறை ஆதினம் உள்ளிட்டோர் புனித நீராடினர். சுவாமி, அம்பாள் காவிரி கரையில் எழுந்தருளினர்.

 

 

Related Stories


First        1  2  3  4  5  6  7  8  9  10  11       Next        Last