HEADLINES:
November 20 2017
வாரிசு அரசியல் பிரச்னை தான்: ராகுல்
12 September 2017

பெர்க்லே:அனைத்து கட்சியிலும் வாரிசு அரசியல் பிரச்னையாக உள்ளதாக காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் கூறியுள்ளார்.

 

வாரிசு அரசியல்:

அமெரிக்காவின் பெர்க்லே நகரில் உள்ள கலிபோர்னியா பல்கலையில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் பேசியதாவது: 2019 ல் காங்கிரஸ் தலைமை பதவியை ஏற்க தயாராக உள்ளேன். ஆனால், இது எனது முடிவு மட்டும் இல்லை. அனைத்து கட்சிகளிலும் வாரிசு அரசியல் பிரச்னையாக உள்ளது. அகிலேஷ் யாதவ், ஸ்டாலின், பிரேம்குமார் துமாலின் மகன் அனுராக் தாக்கூர், ஆகியோரும் வாரிசு அரசியல்வாதிகளே. நடிகர், அபிசேக் பச்சன் கூட வாரிசு அடிப்படையில் வளர்ந்தவர். இதனால், வாரிசு அரசியல் குறித்து என் மீது மட்டும் குற்றம் சுமத்த வேண்டாம்.

 

ஜனநாயக வழியில்:

காங்கிரஸ் ஆட்சி காலத்தில் இந்தியா வளர்ச்சி பெற்றது. இந்தியாவின் வளர்ச்சி அதிகளவில் இருந்ததும் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தான். தலைமை பொருளாதார அரசியல் ஆலோசகர், அமைச்சரவை எடுக்காமல் ரூபாய் நோட்டு வாபஸ் திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்தியாவில் ஜிஎஸ்டி பலத்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் வேலைவாய்ப்பு, சுகாதாரத்துறைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்.சீனா போல் அல்லாமல் இந்தியாவில் ஜனநாயக வழியில் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும். இந்தியாவில் சுதந்திரமாக கருத்து தெரிவிக்கும் பத்திரிகையாளர்கள் சுட்டு கொல்லப்படுகின்றனர். அனைவரிடமும் ஆலோசனை நடத்தி தான் காங்கிரஸ் அரசியல் செய்கிறது. அனைத்து முடிவுகள் எடுக்கிறது. எந்த கொள்கையையும் யார் மீதும் திணிக்கவில்லை.

 

அதிகாரமில்லை:

இன்று நமது எம்.பி.,க்கள் சட்டத்தை உருவாக்குவதில்லை. கிராமங்களில் சாலை அமைப்பது குறித்து தான் அவர்கள் அதிக கவலை கொண்டுள்ளனர். சட்டத்தை உருவாக்கும் வகையில், அவர்களுக்கு அதிக அதிகாரம் அளிக்க வேண்டும். பார்லிமென்டிற்கு என எந்த சட்டமும் இல்லை. பிரதமர் அலுவலகத்திற்கு மட்டுமே அதிகாரம் குவிந்து கிடக்கிறது. தகவல் அறியும் சட்டத்தின் வலிமையை பிரதமர் குறைத்து விட்டார்.

 

அழிப்பு:

காஷ்மீரில் அமைதி கொண்டு வர 9 வருடங்களாக கடினமாக உழைத்தோம். 2013ல் பயங்கரவாதத்தை அடியோடு ஒழித்தோம். ஆனால், ஆட்சி அமைத்த 30 நாளில், 9 வருட பணியை பா.ஜ., கூட்டணி அரசு அழித்து விட்டது. காஷ்மீரில் இளைஞர்களை பிடிபி கட்சி அரசியலுக்கு அழைத்து வந்தது. ஆனால், மோடியுடன் கூட்டணி அமைத்ததும், இந்த விஷயத்தை அவர் அழித்துவிட்டார்.

 

சிறந்தவர்:

மோடி சிறந்த பேச்சாளர். ஆனால், தனது செயல் மற்றும் பணி மக்களிடம் ஆலோசனை செய்வதில்லை. என் மீது தவறான பிரசாரத்தை பா.ஜ., நாடு முழுவதும் பரப்பி வருகிறது.

 

ஆபத்து:

பிரிவினைவாத அரசியல் இந்தியாவை பிரித்துள்ளது. வன்முறைக்கு நான் எதிரானவன். அனைத்து வகையிலான பயங்கரவாதம் கண்டனத்திற்குரியவை. எனது பாட்டியை சுட்டு கொன்றவர்கள் கூட எனது குடும்ப நண்பர்களே. அவர்களுடன் நான் சிறு வயதில் விளையாடியுள்ளேன். வன்முறைக்கு தான் எனது பாட்டி, தந்தையை பறி கொடுத்துள்ளேன். வெறுப்பு, கோபம், வன்முறை, ஆகியவை நம்மை அழித்து விடும், பிரிவினைவாத அரசியல் பெரும் ஆபத்து. இவ்வாறு அவர் பேசினார்.

 

 

Related Stories


First        1  2  3  4  5  6  7  8  9  10  11       Next        Last